Skip to main content

இங்கிலாந்திற்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: டாஸ் வென்றது இந்தியா!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

india vs england test

 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ட்ரா ஆன நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது.

 

இந்தநிலையில், இன்று (25.08.2021) தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இரண்டாவது டெஸ்டில் ஆடிய அதே அணி, இந்தப் போட்டியிலும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.