Skip to main content

தனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

ஆஃப்ரிக்கா கண்டத்திலுள்ள மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஸ்வாசிலேண்ட் எனப்படும் சிறிய நாட்டின் அரசராக இருப்பவர் ‘ஸ்வாடி 3’. இவர் மற்றவர்களுக்கும் தனக்கு தானே கொடுத்துக்கொள்ளும் பரிசுகள் உலக செய்திகளில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் அந்தளவிற்கு காஸ்ட்லி கிஃப்ட் கொடுப்பார் ஸ்வாசி.
 

swati

 

 

கடந்த வருடம் இவருடைய ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக அந்த குறுகிய நாட்டின் பெயரை ஸ்வாசி லேண்ட் என்று மாற்றிக்கொண்டார். பின்னர் தனக்கு தானே ஒரு பிரைவேட் ஜெட்டை பரிசாக வழங்கிக்கொண்டார். ஏற்கனவே பல நூறு கோடி மதிப்பிலான பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திடீரென ஸ்வாடி அரசர் 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியுள்ளார். அதில் தனது மனைவி 15 பேருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். மேலும் 120 பி.எம்.டபுள்யு கார்களை தனது அணிவகுப்பிற்காக வாங்கியிருக்கிறார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிலும், பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும்போது தனது மனைவிகளுக்கு ரூ.175 கோடி மதிப்பில் கார்கள் வாங்கிக்கொடுக்கும் அரசர் என்று சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.  

முன்னதாக தனது 23 குழந்தைகளுக்கு பரிசாக தல ஒரு மெர்சிடஸ் கார் வாங்கிக்கொடுத்திருக்கிறார் இந்த ஏழை நாட்டின் பணக்கார அரசர்.

 

 

சார்ந்த செய்திகள்