Skip to main content

அரசுடைமையான இளவரசி, சுதாகரன் சொத்துக்கள்... கலெக்டர் நேரில் ஆய்வு (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது அவை அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

 

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 14/02/20217 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் படி, சென்னை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட இளவரசி, சுதாகரனின் பெயரிலுள்ள 6 சொத்துகள் அரசின் சொத்து என உரிமை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி, டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள 5 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று  (08/02/2021) சசிகலா தமிழகம்  வந்துகொண்டிருக்கும் நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வேலஸ் தோட்டம் 1 வது தெருவில் கிருஷ்ணா சேம்பர்ஸ் என்ற நான்கு மாடி கட்டிடத்தில் இளவரசிக்கு சொந்தமான இடங்களை  அரசு கையகப்படுத்தியதால் இன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அதனை நேரில் ஆய்வு செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்