Skip to main content

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிசெய்வேன்! ஓபிஎஸ் மகன் வாக்குறுதி!!

Published on 01/12/2018 | Edited on 01/12/2018
I will help the livelihood of storm-affected people!   Ops son promise !!

 

கஜா புயலால் தேனி மாவட்டத்திலுள்ள ஓபிஎஸ் தொகுதியான போடி ஒன்றியத்திலுள்ள அகமலை ஊராட்சிக்குட்பட்ட சொக்கர் அலைமலை கிராமமும் பெரிதும் பாதிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது புயலால் பாதிக்கப்பட்ட  வட மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடியாருடன் ஓபிஎஸ் நிவாரண உதவிகள் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருவதால் தனது சொந்த தொகுதிக்கு வர வர முடியவில்லை.

 

 

அதனால் தனது இளைய மகன் ஜெயபிரதீப்பை சொக்கர் அலைமலை கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சோத்துப்பாறை வழியாக கணக்காய் வரை சென்று அங்கிருந்து பத்து கிலோமீட்டர் காட்டு பகுதியில் ஒபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பும் அப்பகுதி கட்சி கார்களும் நடந்தே சொக்கர் அலைமலை கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறி அரிசி, பருப்பு, சீனி உள்பட உணவு பொருட்கள் மற்றும் மருத்துகள் அதோடு போர்வை, கம்பளி, சேலை, கைலி,சட்டை, வேஷ்டி, பாய் உள்பட துணிமணிகள் ஆகியவைகளை அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி ஆறுதல் கூறினர்.

 

I will help the livelihood of storm-affected people!   Ops son promise !!

 

அதன்பின் அந்த பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து கூட்டம் போட்டு உங்களின் வாழ்வாரத்துக்கு என்ன என்ன வேண்டுமோ சொல்லுங்கள் அதைநான் செய்து கொடுக்கிறேன் என்று ஒபிஎஸ் மகன் ஜெயபிரதீப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அதைக்கண்டு பாதிக்கப்பட்ட மக்கள் பூரித்து போய்விட்டனர்.

 

சார்ந்த செய்திகள்