Skip to main content

மாஜி வீட்டில் ரெய்டு... அண்ணாமலை, எல். முருகனை தொடர்ந்து இ.பி.எஸ்...!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

Edappadi K. Palaniswami meets governor of tamilnadu

 

தமிழ்நாடு ஆளுனரை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை (20.10.2021) சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் நாளை தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான விவாதத்தின்போது அவையைப் புறக்கணித்த அதிமுகவினர், சாலையில் அமர்ந்து மறியல் செய்ததோடு அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தையும் சந்தித்து மனு அளித்திருந்தனர்.

 

இந்நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி நாளை ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரைச் சந்தித்து மனு அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சரான எல். முருகனும் ஆளுநரைச் சந்தித்திருந்தார். அந்த வகையில் நாளை எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க இருக்கிறார்.

 

ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்