Skip to main content

வேலூரில் திமுகவை காப்பாற்றிய அந்த மூன்று தொகுதிகள்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வேலூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்துள்ளது. 
 

dmk



தற்போது நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,79,011 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,70,725 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 26,505 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட 8,286 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இன்னும் மூன்று சுற்றுகள் எண்ணிக்கை இருக்கும் நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றி உறுதி செய்யும் நிலையில் உள்ளது. ஏனென்றால் இன்னும் 12ஆயிரம் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கையில் உள்ளது. தற்போது இருந்தே அறிவாலய வட்டாரங்களில் திமுக தொண்டர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்