Skip to main content

செங்கோட்டையன் அளித்த உறுதி - நம்பிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் 

Published on 26/04/2018 | Edited on 26/04/2018
sen

சென்னையில் 4 நாட்களாக போராடி வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

 ஊதிய முரண்பாடுகளை நீக்கி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி  இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

 

உணவு, குடிநீர் இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்தது.  கிண்டியில் அமைச்சர் செங்கோட்டையுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.   இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று உறுதி அளித்த  அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பழச்சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர் ஆசிரியர்கள்.  

 

இது குறித்து, ’’எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்.  கோரிக்கைகள் தொடர்பாக அடுத்த வாரம் ஒருநபர் குழுவை சந்திக்க உள்ளோம்’’ என்று இடைநிலை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.   

சார்ந்த செய்திகள்