Skip to main content

காணொளி மூலம் திருமணம் செய்ய அனுமதி; உயர் நீதிமன்றம் அதிரடி

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

video conference marriage accept kerala high court  

 

கேரள மாநிலத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தர வேண்டும். இவர்களுடன் சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும் என சட்ட விதிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின் என்பவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்தார்.

 

அந்த மனுவில் தான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய மனு அளித்து உள்ளேன். இருப்பினும் கொரோனா பெருந்தொற்றின் மூலம் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் உள்ள தனது காதலனால் உடனடியாக சொந்த ஊரான கேரளாவிற்கு வர முடியாது என்பதால் காணொலி மூலம் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மற்ற சிலரும் இதேபோல் காணொளி மூலம் தங்களது திருமணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி கேரளாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தனர்.

 

இந்த மனுக்களை ஏற்க மறுத்த பல்வேறு நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு மனுக்களை அனுப்பி வைத்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான முகமது முஷ்டாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணங்களை காணொளி மூலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும் 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி மின்னணு ஆவணங்களுக்கு சட்டத்தில் அனுமதி உண்டு என்பதால் காணொளி மூலம் திருமணம் நடத்துவதில் தவறில்லை என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்