Skip to main content

ராகுலுக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கக் கோரி கடிதம்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Congress letter to Speaker requesting to give MP post to Rahul again

 

ராகுல்காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

 

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு எம்.பி பதவியை மீண்டும் வழங்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்