Skip to main content

மேற்குவங்கம், பீகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல்!

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

By-elections in West Bengal, Bihar, Chhattisgarh and Maharashtra!

 

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 12- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கம் மாநிலத்தில் தலா 1 மக்களவைத் தொகுதி, 1 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 12- ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வரும் மார்ச் 17- ஆம் தேதி அன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது; வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் மார்ச் 24- ஆம் தேதி அன்று கடைசி நாளாகும். வரும் மார்ச் 25- ஆம் தேதி அன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 

 

வரும் மார்ச் 28- ஆம் தேதி அன்று வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். ஏப்ரல் மாதம் 12- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும். வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது." இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்