ADVERTISEMENT

“ஒன்னா படம் நடிச்சார் என்ற ஒரே காரணத்துக்காகவே ஒருவர் முதல்வராகும் போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகக் கூடாதா?” - காந்தராஜ் கேள்வி

11:35 PM Dec 17, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT


திமுக அரசில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து பாஜக அதிமுக உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகிறார்கள். உச்சக்கட்டமாக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம் நடத்தி முடிந்துள்ளார். அவர் வந்தால் தமிழ்நாட்டுக்கு என்ன பாலாறும் தேனாறுமா ஓடப்போகிறது என்று விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் பேசியபோது, " தமிழச்சி தங்க பாண்டியனை எதிர்த்து தென் சென்னையில் ஒருவர் போட்டியிட்டார். யார் அவர்? ஜெயக்குமார் மகன். அவரு ஜெயக்குமாருக்கு பொறந்தவர்தானே? ஜெயக்குமார் யாரு; முன்னாள் அமைச்சர்தானே? இது மட்டும் என்ன வாரிசு அரசியலில் வராதா என்று தெரியவில்லை.

ADVERTISEMENT

ரவீந்திர நாத் என்ற ஒருவர் எம்பியாக இருக்கிறாரே அவரு யாரு? அதிமுகவை முதன் முதலில் துவக்கியவர் யாரு., எம்ஜிஆர். அவருக்கு பிறகு யாரு முதலமைச்சரா வந்தார்கள். அவருடைய மனைவி ஜானகி. அவர் என்ன அதிமுகவின் உறுப்பினரா., இல்லை ஏற்கனவே பதவியிலிருந்தவரா? அதற்கு பிறகு யார் முதல்வராக வந்தார்கள் ஜெயலலிதா. அவர் என்ன அடிப்படை உறுப்பினரா? கூட சேர்ந்து நடிச்சாங்க; முதல்வரா வந்தாங்க. உதயநிதியையாவது சொந்தம் என்று சொல்லிக்கொள்ளலாம். இவர்களுக்கு அந்தத் தகுதி கூட இல்லையே., ஒன்னா நடிச்சதை தவிர வேறு எந்த தகுதியின் அடிப்படையில் இவர்கள் முதல்வராக வந்தார்கள் என்று இன்றைக்கு உதயநிதியை வாரிசு அரசியல் என்று சொல்லுபவர்கள் கூறினால் நன்றாக இருக்கும்.

அதிமுகவுக்கு இந்த மாதிரியான சம்பந்தம் இல்லாத எல்லா விதமான நபர்களும் வரலாம். ஆனால் இவர்கள் எல்லாம் வாரிசு கிடையாது. உதயநிதி வந்தால் மட்டும் அவர் வாரிசு அரசியல் செய்கிறார் என்கிறார்கள். ஜெயவர்த்தனுக்கு ஜெயலலிதா சீட் கொடுத்தார்கள் என்றால்., உதயநிதியைக் கட்சி தொண்டர்கள் தேர்ந்தெடுத்து செயலாளர் ஆக்கினார்கள், தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். இன்றைக்கு அமைச்சராக இந்த இடத்திற்கு வந்துள்ளார். அப்பா பதவியில் இருக்கிறார் என்கிற காரணத்திற்காக மகனுக்கு அமைச்சர் பதவி தரக்கூடாது என்கிற விதி இருக்கா? அவர் எம்எல்ஏவாக இருந்தால் போதும். வேறு தகுதி அவருக்குத் தேவையில்லை. யாரை வேண்டுமானாலும் இந்த தகுதியின் மூலம் அமைச்சர் ஆக்கலாம். எனவே இவர்கள் சொல்லுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை"என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT