Skip to main content

ஆரவாரத்தில் திமுக இளைஞரணி...! (படங்கள்)

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

 
க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுக இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றி வரும் திமுக மு.பெ.சாமிநாதனை, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக, கழக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்'' என்று அறிவித்துள்ளார். 
 

அதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் மற்றும் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கொண்டாடிவருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

''விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்''- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
"May his people succeed in their work" - Udayanidhi wishes

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சிப் பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த அமைச்சர் உதயநிதியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிளித்த அவர், 'இந்திய ஜனநாயகத்தில் யாரும் அரசியல் கட்சி இயக்கம் தொடங்கலாம். அதற்கான உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் அந்த முடிவை எடுத்திருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வோம். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்'' என்றார்.

Next Story

“சேரி மொழியில் என்னால் பேச முடியாது” - குஷ்பு பதிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

kushpoo manipur tweet issue

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர் பேசியதாவது, லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

 

ad

 

அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். பின்பு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மன்சூர் அலி கான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். 

 

இந்த நிலையில் குஷ்பு, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்பு-வை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை என குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த குஷ்பு, “ஒரு பெண்ணை அவமதிக்கும் விதமாக தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இது தான் திமுக-காரர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைக் காட்ட முடியும். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது. உங்களைப் போன்ற முட்டாள்கள் ஸ்டாலினை சுற்றி இருப்பது அவருக்கு அவமானம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர்களை போல இருக்கும் முட்டாள்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என மு.க ஸ்டாலினை டேக் செய்துள்ளார். 

 

இந்நிலையில் குஷ்பு தனது பதிவில் சேரி மொழி என பயன்படுத்தியுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.