ADVERTISEMENT

இப்போது பலர் செய்வதை தொண்ணூறுகளிலேயே செய்தது நக்கீரன் - நக்கீரன் பற்றி செயல்பாட்டாளர்களின் கருத்துகள்

11:48 AM Apr 20, 2018 | kamalkumar

ஊழல், லஞ்சம் போன்ற விஷயங்களை முதன் முதலில் நக்கீரன் வழியே தான் நாம் தெரிந்துகொள்கிறோம். இதுபோன்ற சேவைகள் பாராட்டத்தக்கது. பலருக்கு நக்கீரன் ஒரு முன்மாதிரியாகவும், தூண்டுகோலாகவும் இருக்கிறது. நக்கீரன் இதுபோன்ற விஷயங்களால் ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்கியுள்ளது. பல பத்திரிகைகள் தற்போது இந்த வழியை பின்தொடர்கின்றனர். தொண்ணூறுகளிலும், இரண்டாயிரத்திலும் நக்கீரன்தான் இதில் முதன்மையாக செய்தது. தற்போது பலர் நக்கீரனை பின்தொடர்கிறார்கள்.

ADVERTISEMENT

-"அறப்போர் இயக்கம்" ஜெயராம்

ADVERTISEMENT

புலனாய்வு பத்திரிகைகளில் முதன்மையானது நக்கீரன். குறிப்பாக வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது நடந்த அத்துமீறல்களை எல்லாம் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அவற்றையெல்லாம் நக்கீரன் வெளிக்கொண்டுவந்ததால் அவர்கள் எதிர்கொண்டது ஏராளம். தமிழக வரலாற்றில் ஒரு அரசினால் அதிகம் அடக்குமுறைக்கு ஆளானது நக்கீரன் தான். மற்ற பத்திரிகைகளின் பங்கும் தமிழகத்தில் உள்ளது அதை மறுக்கவில்லை, இருந்தாலும் ஒரு அரசாங்கம் ஒரு பத்திரிகையை அதிக அடக்குமுறை செய்தது நக்கீரனை தான். இரண்டாவது, ஆதாரங்களை சேகரிப்பது. குறிப்பாக ஜெயலலிதா என்பவர் தன்னை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் அவர் பழிவாங்கபடுவார்கள் என்ற நிலை இருந்தது, இன்னொரு பக்கம் அரசாங்க கெடுபிடி இருந்த போதிலும் ஒற்றை பத்திரிகையாக இருந்துகொண்டு அவர்களையே எதிர்த்தார்கள். நக்கீரன் யாரிடமும் சமரசம் செய்துகொண்டது இல்லை. அடுத்தது தனிமனித வலியையும், சமூக வலியாக மாற்றுவதில் நக்கீரனுக்கு அதிக பங்கு உண்டு. மக்கள் மத்தியில் ஒரு ஊடகம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும், அதை நக்கீரன் செய்துகொண்டே இருக்கிறது. ஒரு சின்ன விஷயம் என்று எதையும் விடாமல் எடுத்து மக்களுக்கு தெரிவிக்கிறது நக்கீரன். மக்களிடையே நம்பகத்தன்மையை கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரு விஷயம் நக்கீரன்ல வந்துச்சுன்னா, நக்கீரன்லயே வந்துருசுப்பா அப்படினு சொல்வாங்க. ஒரு கொலைகாரன் என்றாலும் அவரை வேறுஒரு கோணத்தில் பார்த்தது நக்கீரன் தான். பெரிய விஷயங்களில் எதுவாக இருந்தாலும் நக்கீரனின் பங்கு அதில் அதிகம் இருக்கிறது. ஒவ்வொரு பத்திரிகைகளுக்கும் ஒவ்வொரு பாரம்பரியம் இருக்கிறது என்பார்கள் அதுபோலவே நக்கீரனுக்கும் இருக்கிறது. தொடர்ந்து நக்கீரனின் பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்.

-"எவிடன்ஸ்" கதிர்

தமிழக பத்திரிகை நிறுவனத்தின் ஒரு தலைவரும், அதன் பத்திரிகையாளர்களும் அரசை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்டது நக்கீரனில் மட்டும்தான். அப்போதும் கூட அவர்கள் மாநில அரசாங்கத்தை எதிர்த்து மக்களுக்கு தொன்று ஆற்றி வருவது சிறப்பு. நக்கீரன் திறம்பட செயலாற்றிக்கொண்டிருக்கிறது. வீரப்பன் விஷயத்திலும் அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது. மேலும் அவர்களுக்கு பலம் அளிக்க வாழ்த்துக்கள், இன்னும் நடக்கும் சமுதாய அவலங்களை வெளியில் கொண்டு வரவேண்டும்.

-பியூஸ் மனுஷ்

புலனாய்வு வார இதழ்களில் முதன்மை பெற்றது நக்கீரன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தற்போது தமிழகத்தில் நிர்மலா தேவியை வெளியுலகுக்கு கொண்டுவந்ததில் இருந்து பல பிரச்சனைகளை வெளிக்கொண்டுவந்த பங்கு நக்கீரனுக்கு இருக்கிறது. தற்போது காலசூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்பத்திலும் உயர்ந்துகொண்டு, டிஜிட்டல் முறையில் இணையத்திலும் "nakkheeran.in" என்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பத்திரிகை நிறுவனமாகவும் உள்ளது. நக்கீரனுக்கு ஏற்பட்ட அடக்குமுறை என்பது வேறு எந்த பத்திரிகைக்கும் நடந்திருக்காது, இருந்தாலும் அதையும் மீறி பிரச்சனைகளை அவர்கள் வெளிகொண்டுவருவது சிறப்புதான்.

-"பூவுலகின் நண்பர்கள்" சுந்தர்ராஜன்

நக்கீரனின் முப்பது ஆண்டு பயணத்தில், புலனாய்வின் மூலம் பல புள்ளிகளை வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள். சமீபத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி வரைக்கும் என்றாலும் கூட நான் நக்கீரனின் வெற்றியாக, கொண்டாட்டமாக பார்ப்பது நக்கீரன் என்ற ஒரு பத்திரிகைதான் ஒரு செல்வந்தரால் தொடங்கப்படாமல், சாதாரண மனிதரால் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. தமிழகத்தில் அதுவும் பத்திரிகை சூழலில் எளிய மனிதர்கள் வெல்வது கடினம், அதை கோபால் அண்ணன் முறியடித்தார் என்பது சிறப்பான விஷயம். இரண்டாவது பிராமணர் அல்லாதார் பத்திரிகை நடத்தி இங்கு பிழைப்பது என்பது அரிதிலும் அரிது. அந்த அரிதிலும் அரிதான மனிதராகத்தான் கோபால் அண்ணனை நான் பார்க்கிறேன். நக்கீரன் மேலும் ஐம்பது, நூறு என்று தொடர்ந்து பல ஆண்டுகளைக் கடக்க வேண்டும் என நம்புகிறேன்.

-கரு.பழனியப்பன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT