nakkheeran

தமிழக ஆளுநரின் புகாரும், அதனடிப்படையில் தமிழக அரசு நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை அவசரம் அவசரமாக கைது செய்து சிறையில் அடைக்க முயற்சி செய்ததும், அதற்கு நீதிபதி அளித்த சிறப்புமிக்க தீர்ப்பும், தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் பெரும் தலைகுனிவை ஏறுபடுத்தி உள்ளது.

Advertisment

இதன் மூலம் நக்கீரன் இதழுக்கும் அதன் ஆசிரியர் திரு.கோபால் அவர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளனர். இதன் மூலம் இன்னும் வீரியமாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணத்தை அவருக்கு வழங்கி உள்ளனர்.

Advertisment

nakkheeran

இந்த விஷயத்தில் நக்கீரன் ஆசிரியருக்கு ஆதரவாக உடனடியாக களத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டு கைதான மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களுக்கும், நீதிமன்ற நிகழ்வுகளில் கூடவே இருந்து வழக்கிலிருந்து விடுதலை பெறும் வரை கூடவே இருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்களுக்கும், இந்து ராம் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கும் உள்ளபடியே வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.

ஆட்சியில் இருப்பவர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு செயல்படும் சர்வாதிகார செயலுக்கு கிடைத்த மரண அடிதான் இந்த தீர்ப்பு. நக்கீரன் எப்போதும் போல தொடர்ந்து களத்தில் நிற்க வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.

Advertisment

ந.செல்லத்துரை,

மாவட்டச் செயலாளர்,

மத்திய சென்னை,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.