ADVERTISEMENT

மீண்டும் களமிறங்கும் என்.கே.கே.பி. ராஜா! -அ.தி.மு.க. கலக்கம்!

12:23 PM Dec 22, 2020 | rajavel

ADVERTISEMENT

கொங்கு பெல்ட்தான் கடந்த 2016-ல் தி.மு.கவின் காலை வாரிவிட்டது. அதிலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளும் அ.தி.மு.க. வசமானது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியில் இரண்டாயிரம், ஈரோடு கிழக்கில் 7 ஆயிரம், ஈரோடு மேற்கில் 5 ஆயிரம், பெருந்துறை தொகுதியில் 13 ஆயிரம் என்ற வித்தியாசத்தில் தி.மு.க. தோல்வியடைந்தது.

ADVERTISEMENT

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகத்தில் உள்ள அந்தியூர், பவானிசாகர், பவானி, கோபிசெட்டிபாளையம் இந்த நான்கு தொகுதிகளில் பவானியைத் தவிர மற்ற மூன்று தொகுதிகளிலும் வெறும் ஆயிரக்கணக்கான வாக்குகளில் தி.மு.க. தோல்வியுற்றது. ஈரோடு மாவட்டத்தில் சொற்ப வாக்குகளில் தி.மு.க. தோற்றுப் போகாமல் எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, கொங்கு பெல்ட்டின் மற்ற பகுதிகளிலும் கணிசமாக வென்றிருந்தால் தி.மு.க. ஆட்சி அமைத்திருக்கும்.

இப்போது மீண்டும் அந்த தவறு ஏற்படக்கூடாது என்பதில் திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன் தொடக்கமாக கட்சி பணிகளில் ஒதுங்கியிருந்த மாஜி மா.செ.வும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி.ராஜாவை மீண்டும் செயல்பட கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான என்.கே.கே. பெரியசாமியின் துணைவியார் (என்.கே.கே.பி. ராஜாவின் தாயார்) மூன்று வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டு இறந்து விட்டார். சென்றவாரம் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜா வீட்டுக்குச் சென்று அவரது தந்தை பெரியசாமி மற்றும் ராஜாவிடம் துக்கம் விசாரித்ததோடு, ராஜாவிடம் சென்னைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் 11-ந் தேதி சென்னை சென்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து விட்டு உற்சாகமாகத் திரும்பியிருக்கிறார் ராஜா.

கட்சி நிர்வாகத்தில் அதிரடியான செயல்பாடு கொண்ட ராஜாவுக்கு வடக்கு மாவட்ட கட்சி பொறுப்பு விரைவில் கொடுக்கப்பட இருக்கிறது. அதில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றிக்கு உறுதி கொடுத்துள்ளாராம் என்.கே. கே.பி.ராஜா.

இதுபற்றி நம்மிடம் பேசிய என்.கே.கே.பி.ராஜா ""கட்சித் தலைவர் தளபதியின் ஆணைக்கிணங்க எனது செயல்பாடு இருக்கும். ஈரோடு மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து செயல்படுவேன். தி.மு.க.வின் வெற்றிதான் ஒரே லட்சியம்'' என்றார்.

2006 தேர்தலில் ஒட்டு மொத்த ஈரோடு மாவட்ட தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றி பெற வைத்தவர் என்.கே.கே.பி. ராஜா. கலைஞர் அமைச்சரவையிலும் இடம்பெற்றார். அதிரடியான போக்குகளை நக்கீரன் அம்பலப்படுத்த, அவரது பதவி பறிபோனது. இப்போது முற்றிலும் மாறுபட்ட இரண்டாவது இன்னிங்ஸுக்காக ரெடியாகியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT