ADVERTISEMENT

“என்னை எதிர்த்தால் மீண்டும் 1989!” - சசிகலா திட்டவட்டம்!

03:09 PM Mar 02, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அதிமுக அமைச்சர்கள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் நிலையில், அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்.ஸும் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியபோது வெளிப்பட்ட அதிருப்தியை, ஒரு தரப்பினர் தகவலாக நம்மிடம் சொன்னார்கள்.

“கூட்டணி முடிவாகி ஒப்பந்தத்தில் அமித்ஷா கையெழுத்திடும் நிலை ஏன் வரவில்லை தெரியுமா? சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகி, அதிமுக ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், 16-ஆம் தேதி சசிகலா பொதுச்செயலாளர் ஆகக்கூடிய நிலை உருவாகும். இல்லையென்றால் இரட்டை இலை முடக்கப்படும்.’ என்று அதிரடியாகப் பேசிவிட்டு கிளம்பினார் அமித்ஷா.

அதன்பிறகு, சீனியர் அமைச்சர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘தென்மாவட்டம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது, ‘சின்னம்மாவ சேர்த்தா ஃபுல்லா வந்திடலாம். சேர்க்கலைன்னா தென்மாவட்டத்துல ஒரு சீட் கூட வராது..’ என்று தங்களிடம் ராஜேந்திரபாலாஜி சொன்னதை அப்படியே ஒப்பித்திருக்கிறார்கள், இரண்டு அமைச்சர்கள். அதற்கு ஈ.பி.எஸ். ‘நாலரை வருஷம் அவரை காப்பாத்தி மந்திரியா வச்சிருக்கோம். இப்படியா சொல்லிட்டிருக்காரு?’ என்று டென்ஷனாக, அதற்கும் ராஜேந்திரபாலாஜி வாய்ஸையே ரிபீட் செய்திருக்கின்றனர். ‘என்னை அமைச்சராக்கியது அம்மா. அவங்க பொதுச்செயலாளரா இருந்தப்ப.. முதலமைச்சரா இருந்தப்ப.. எனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு தந்து மந்திரியாவும் ஆக்கினாங்க. ஈ.பி.எஸ். என்ன பண்ணுனாரு? மாவட்டச் செயலாளர் பொறுப்புல இருந்து என்னை நீக்கினாரு. அப்புறம் மாவட்டப் பொறுப்பாளர் ஆக்கினாரு. இப்ப என்னோட விருதுநகர் மாவட்டத்த ரெண்டாக்கிட்டாரு. சின்னம்மாவ கட்சியில சேர்த்தால்தான் முக்குலத்தோர் ஓட்டு. இல்லைன்னா அந்த சமுதாய ஓட்டு அதிமுகவுக்கு விழாது..’ என்று கூற, ‘இந்த மாதிரி பேசிக்கிட்டிருந்தா அவரை தொலைச்சிருவேன்’னு ஈ.பி.எஸ்., கூடுதலாகக் கொதித்திருக்கிறார்.

கட்சியில் சேர்த்து ‘மீண்டும் சசிகலாவுக்கு எடுபிடிகள்’ ஆவதை விரும்பாத தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் போன்றவர்கள், எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். ஆனாலும், மனோஜ்பாண்டியன் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் முன்வைக்காமல், ‘ஓ.பி.எஸ். எவ்வழியோ அதுவே என் வழி’ என்பதில் உறுதியாக இருக்கிறார். ‘சின்னம்மாவை சேர்த்தால் நல்லது..’ என்ற ராஜேந்திரபாலாஜியின் கருத்து, ஓ.பி.எஸ்.ஸுக்கு உள்ளுக்குள் ‘ஓ.கே.’ என்றாலும், வெளிப்படையாக ‘ரியாக்ட்’ பண்ணவில்லை.

‘சசிகலாவை சேர்த்தால் முக்குலத்தோருக்கு எதிரான மனநிலையில் உள்ள பிற சமுதாய வாக்குகள் அதிமுகவுக்கு விழாது. குறிப்பாக பட்டியலின மக்களின் வாக்குகள் மொத்தமாக எதிரணிக்குப் போய்விடும்.’ என்ற கோணத்தில் நிர்வாகி ஒருவர் பேச, ‘ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இவரை எந்த சமுதாய மக்களும் நம்ப மாட்டார்கள்.’ என்று ‘கமெண்ட்’ அடித்திருக்கிறார் இன்னொரு நிர்வாகி.


சசிகலா நிலைப்பாடு என்னவாம்? இரட்டை இலைக்கு எதிராக வாக்கு கேட்பதை ஒருநாளும் செய்யமாட்டார். அதேநேரத்தில், பொதுச்செயலாளர் பொறுப்பு இல்லையென்றால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் தயங்க மாட்டார். சசிகலாவுக்கு எதிரான போக்கினை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்தால், ‘மீண்டும் 1989’ என்ற நிலை ஏற்பட்டு, இன்றைய அதிமுகவே மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கிவிடும்.”


இப்படி புலம்பும் நிலைக்கு அதிமுகவினரைக் கொண்டுவந்துவிட்டார் சசிகலா!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT