இரட்டை இலை சின்னம் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பிற்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk_16.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா திங்க்ரா செகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிற்பகல், இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் இடைத்தேர்தலின்போது குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்கவேண்டும் என டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது. 4 வாரங்களுக்குள் அந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை என்றால், குக்கர் சின்னம் குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியது. இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)