Skip to main content

" இந்தியாவில் இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை...." - பிரதமர் மோடி வருத்தம்

Published on 19/04/2018 | Edited on 19/04/2018

ஐரோப்பாவிற்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி நேற்று லண்டன் பிரதமர் தெரசா மே வை சந்தித்து இருநாட்டு வியாபாரம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசினார். பின்னர் மோடிக்கும், இந்திய வாழ் மக்களுக்கும் இடையே கேள்வி பதில்கள் 'பாரத் கி பாத், சப்கே சாத்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பிரசூன் ஜோஷி. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய சில அம்சங்கள்....
 

pm modi
  • "நானும் உங்களை போன்ற ஒரு சாதாரண மனிதன்தான். நான் இருக்கும் பதவி, நான் பார்க்கும் வேலை மட்டும்தான். நான் ஒரு வாழ்நாள் மாணவன். அனைத்து இந்திய மக்களும் எனக்கு ஒன்றுதான் நான் முடிவுகளை ஒரு சாரருக்காக எடுக்க மாட்டேன். நான் தவறுகள் செய்யலாம், ஆனால் அது தவறான நோக்கத்துடன் இருந்தது இல்லை." 
     
  • "என்னால் மட்டும் இந்தியாவை மாற்றிவிட முடியும் என்று நான் ஒருபோதும்  நினைத்ததே இல்லை. ஆனால், லட்சம் பிரச்சனைகள் நமக்கிருந்தாலும் அதனை தீர்க்க கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர் என்பவன் நான். அதுதான் எனக்கு  உறுதியளிக்கிறது."
     
  • "நான் விமர்சனங்களை கண்டு வருத்தப்பட்டதில்லை. தயவு செய்து எங்களை விமர்சனம் செய்யுங்கள் அப்போது தான் நாங்கள் எச்சரிக்கையாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க முடியும். ஆனால், தற்போது விமர்சனங்கள் எல்லாம் தரம் குறைந்து குற்றச்சாட்டுகளாகவே இருக்கிறது. மக்கள் யாரும் ஒரு விமர்சனத்துக்கு வலுவான வழியில் ஆராய்ச்சி செய்வதில்லை. மக்கள் என்னை பார்த்து, "அவர் விமர்சனத்துக்கு பதிலளிக்க மாட்டார்" ,என்று கூறுகின்றனர். ஆனால், உண்மையில் நான் அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல், விமர்சனம் என்ற ஒன்றிர்க்கு நம்பிக்கை தருகிறேன்". 
     
  • "வரலாற்று பக்கங்களில் மோடியின் பெயர் இருக்க வேண்டாம். நான் இங்கு என் வேலையை பார்க்க வந்தவன், அதற்குமேல் ஒன்றுமில்லை. என் பெயர் அழிவற்ற வரலாற்று பக்கங்களில் இருக்க வேண்டாம்."
     
  • "தற்போது நாம் எங்கு இருக்கிறோம், எங்கே இருக்கிறோம் என்பதை பாருங்கள். நான் நினைக்கிறேன் மக்கள் இவற்றை எல்லாம் உணர்ந்திருப்பார்கள் என்று. அதாவது நாட்டை சுத்தம் செய்யும்போது, கற்களை நாங்கள் விட்டுச் செல்லவில்லை என்று." 
     
  • "பாலியல் வன்புணர்வு என்பது பாலியல் வன்புணர்வு தான், அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது. இச்சம்பவம் நாட்டுக்கே ஒரு அவமானம்."
     
  • "எனக்கு மூன்றே விஷயங்கள் வேண்டும், மாணவர்களுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலை, முதியவர்களுக்கு மருத்துவம்."
     
  • "பணமதிப்பிழப்பு பற்றி மோடி கூறுகையில், " இந்திய மக்கள் உண்மைக்கும், வெளிப்படையான அரசாங்கத்திற்காகவும் சிறு தியாகத்தை செய்வார்கள் என்று நான் நம்பினேன்".
     
  • "நான் கூட்டுறவு கூட்டாட்சி முறையை போட்டிக்குரிய கூட்டுறவு கூட்டாட்சி முறையாக மாற்ற நினைத்தேன்." 
     
  • "18,000 கிராமங்களில் மின்சார வசதியில்லை. பல பெண்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. இதுபோன்ற பிரச்சனைகள் இன்றும் இந்தியாவில் இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. நான் ஒரு உறுதியுடன் இருக்கிறேன், இந்திய ஏழைகளுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று."
     
  • "ஆம், மக்கள் எங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள், அவர்களுக்கு எங்களால் வழங்கமுடியும் என்பதால் தான் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் என்ன சொன்னாலும், அரசாங்கம் அவற்றை எல்லாம் கவனிக்கிறது என்பது அவர்களுக்கு தெரிகிறது." 
     
  • "ரயில் நிலையத்தில் நின்ற மனிதரின் பெயர் நரேந்திர மோடி. தற்போது இந்த ராயல் அரண்மனையில் உங்கள் முன்னால் இருக்கும் மனிதர் 125 கோடி இந்திய மக்கள் ."                                                          

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.