வேலூர் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

Vellore

Advertisment

Advertisment

வேலூர் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை சட்டமன்ற வாரியாக தி.மு.க. நியமித்துள்ள நிலையில், அ.தி.மு.க. சார்பிலான பொறுப்பாளர்கள் குறித்து எடப்பாடியிடம் வலி யுறுத்தியிருக்கிறார் ஏ.சி.சண்முகம். இதுகுறித்து, அமைச்சர்களிடம் எடப்பாடி ஆலோசித்தபோது, தலைமைப் பொறுப்பை ஏற்க அமைச்சர்கள் பலரும் தயக்கம் காட்டியுள்ளனர்.

இதனிடையே, துரைமுருகன் தனது மகனை வெற்றிபெற வைக்க எடுத்த முயற்சியில், எடப்பாடியும் துரைமுருகனும் கூட்டு சேர்ந்திருப்பதாகவும் இதுகுறித்து எடப்பாடியிடம் துரைமுருகன் பேசிவிட்டதாகவும் உளவுத்துறையிலிருந்து தகவல் கசிந்துள்ளது. இந்தத் தகவல், அமித்ஷாவின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு, டெல்லியிலிருந்து அ.தி.மு.க.வுக்கு அட்வைஸ் செய்யப்பட்டுள்ளதாம்.