ADVERTISEMENT

என்றைக்கு சதம் அடிக்கப்போகிறதோ!!! அது நடக்காமல் இருக்கவேண்டும் என்பதே அனைவரும் விரும்புவது...

12:20 PM Mar 09, 2019 | kamalkumar


ADVERTISEMENT

சென்னை பன்னாட்டு விமானநிலையம் உலகத்தரம் வாய்ந்த விமானநிலையமாகும். மேலும் அது கண்ணாடி மாளிகை போன்ற தோற்றத்தை உடையது. பல்வேறு பொருள்களில் (விஷயங்கள்) சென்னை விமான நிலையம் முதலிடத்தை பெற்றுள்ளது. ISO-9001-2000 சான்றிதழை பெற்ற முதல் பன்னாட்டு முனையகம், சுற்றுச்சூழலை கருத்தில்கொண்டு பேப்பர் கப்பை அறிமுகப்படுத்திய முதல் வானூர்தி நிலையம். சிறந்த வானூர்தி நிலையம் என்ற குடியரசு தலைவர் விருது, உள்நாட்டு முனையத்தில் ஏரோப்ரிட்ஜ் (aerobridges) எனப்படும் வானூர்தியுடன் இணைக்கும் பாலத்தை பெற்ற முதல் நிலையம், பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் ஆகிய இரு முனையங்களிலும் சுகாதாரமான இலவச குடிநீர் வழங்கிய முதல் நிலையம் இவ்வளவு பெருமைகளை பெற்றிருந்தாலும் ஒரே ஒரு பொருள் மட்டும் அதற்கு எதிர்ப்பாக இருந்துகொண்டே இருக்கிறது. அதுதான் கண்ணாடி விழுவது.

ADVERTISEMENT

என்னை அறிந்தால் படத்தில் விவேக் விமான நிலையத்திற்குள் ஹெல்மெட் அணிந்து வருவார். அதை பார்த்த அஜித் ஏன் ஏர்போர்ட்க்குள்ள ஹெல்மெட் போட்ருக்கிங்க. என கேட்க, விவேக் இப்போலாம் ஃப்ளைட்-ல நடக்குற ஆக்ஸிடெண்ட்-அ விட ஏர்போர்ட்க்குள்ளதான் அதிகமா ஆக்ஸிடெண்ட் ஆகுது. எப்போ எந்த கண்ணாடி உடையும்னே தெரியல எனக் கூறுவார். கிட்ட மே 12, 2013லிருந்து மார்ச் 13,2016 வரை அப்படித்தான் இருந்தது. எப்போது எந்த கண்ணாடி விழும் என்றே தெரியாது. சிலநேரங்களில் தினமும் அல்லது ஒருநாள் இடைவெளியில் தலைப்பு செய்திகளாக வந்த தருணமெல்லாம் உண்டு. அதிலும் அந்த ஓர் இடத்திலிருந்த கண்ணாடி மட்டும் அடிக்கடி விழுந்தது அனைவருக்கும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

கடந்த டிசம்பர் 7ம் தேதி 83வது முறையாக கண்ணாடி விழுந்தது. அது விழுந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதன்பின் டிசம்பர் 14ம் தேதி 84வது முறையாக மீண்டும் ஒரு கண்ணாடி விழுந்தது. இது 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்டது. அந்தப் பக்கம் சென்ற ஒரு பேட்டரி கார் இடித்ததில்தான் இந்த கண்ணாடி விழுந்துள்ளது என சொல்லப்பட்டது. நல்லவேளையாக அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன்பின் ஜனவரி 20ம் தேதி 85வது முறையாக விழுந்தது, குடியரசு தினவிழா நெருங்கவிருந்த நிலையில் கண்ணாடி விழுந்தது, பரபரப்பை கிளப்பியது. தற்போது மீண்டும் 86வது முறையாக கண்ணாடி விழுந்துள்ளது.

கண்ணாடிகள் விழுவதை தவிர்க்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதுதான் அனைவருக்கும் நன்மை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT