சென்னையில் காற்று மாசு இயல்பை விட இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க துணை தூதரக ஆய்வில் தகவல். காற்று மாசு குறியீடு 50க்குள் இருக்க வேண்டிய நிலையில், குறியீடு 182 நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழகத்திற்கு பரவ வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில், சென்னையில் காற்றின் மாசு அதிகரித்துள்ளது என்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

chennai district air pollution raised shock report

டெல்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றன. மேலும் ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் காற்றின் மாசு அதிகரித்துள்ளது. இதனிடையே டெல்லியில் இன்று பிரதமரின் முதன்மை செயலாளர், டெல்லி உள்ளிட்ட மூன்று மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.