ADVERTISEMENT

"அ.தி.மு.க ஆட்சி இனிமேல் தமிழகத்திற்கு வரக்கூடாது” - ரஜினி

01:10 PM Dec 12, 2018 | tarivazhagan

ரஜினியின் 69-வது பிறந்தநாளை இன்று அவரின் இரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடிக்கொண்டு இருக்க, மறுபுறம் அவரின் பேட்ட படத்தின் டீசர் வெளியாகி அவரின் இரசிகர்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் அவரின் அரசியல் நுழைவு குறித்தும் அவ்வபோது பேச்சுகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ரஜினி, தனது 47-வது பிறந்த நாள் (12.12.1995) அன்று, மக்கள் கடிதங்கள் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அளிக்கவிருந்தப் பதில்கள். இந்தப் பதில்கள் ரஜினி கடைசியாக பார்த்து சென்சார் செய்வதற்கு முன்பாக கிடைத்த தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேட்டியில், இமயமலையில் ஒரு சாமியாரை சந்தித்து அவர் பேச்சைக் கேட்டதால் ரஜினிக்கு வந்த தொல்லைகள் மற்றும் அதனால் அவருக்கு கிடைத்தது என்ன, தனக்கு எதிரி எந்த ஆட்சி என்பதைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். முக்கியாமக தான் எந்த சூழலில், எப்படி அரசியலுக்கு வருவேன் என்பதை தெரிவித்துள்ளார். அவரின் பதில்களை ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

  • இமயமலைக்கு சென்றிருந்தப்போது ஒரு சாமியாரை பார்த்தேன் அவர் சொன்னார், “நான் உன்னைப் போல ஒரு சாமியாரை இங்குதான் சந்தித்தேன். அவர் ஆறு மாதகாலம் பொய்யே பேசாமலிருந்துவிட்டு இங்குவா என்றார். நானும் பொய் பேசுவதேயில்லை. எனக்கு பெரிய தொல்லைகள் வந்தது. மனைவி, குழந்தைகளெல்லாம் விலகிவிட்டார்கள். சிறைக்கும் அனுப்பப்பட்டேன். அப்படியிருந்தும் நான் பொய் பேசவில்லை. ஜெயிலிலிருந்தபோது என் வக்கீல்கள் வந்து ‘16 கோடி ரூபாய் உங்களுக்கு வந்துள்ளது’ என்றார்கள். பொய் பேசாமலிருந்ததற்கு 16 கோடி ரூபாய்” என்றார் அந்த சாமியார். அவருக்கு வயது 80.

  • எனக்கு எதிரி யாருமில்லை. அ.தி.மு.க.விலும் நண்பர்கள் இருக்கின்றார்கள். ஜெயலலிதாவின் ஆட்சி முறைதான் எனக்கு எதிரி.

  • நான் அரசியலுக்கு வரலை. இறையருளால், உங்க ஒத்துழைப்போடு அடுத்த தடவை ஆட்சிக்கு வந்தா சிங்கப்பூர் போல் கண்டிப்பா இந்த நாட்டை வைச்சுக்குவேன். அதுக்கு உங்க ஒத்துழைப்பும் அவசியம் தேவை.

  • இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இனிமேல் ஜெயலலித்தா ஆட்சி வந்துவிடக்கூடாது. என்று அந்தப் பதில்களின் சாரம்சம் இருந்தது.

இதைத்தவிர்த்து தான் எப்போது, எப்படிப்பட்ட சூழலில் அரசியலுக்கு வருவேன் என்பதைப் பற்றி ரஜினியே சொல்லியிருக்கிறார்.

  • “எங்கேயோ பிறந்து வளர்ந்த என்னை தமிழக மக்கள் தங்கள் வீட்டுப்பிளையாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு கைமாறு நான் ஏதாவது செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலை இப்போது இல்லை. இந்த அ.தி.மு.க ஆட்சி இனிமேல் தமிழகத்திற்கு வரக்கூடாது. மீறிவந்தாலும் அல்லது தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் அப்போது என் மனைவி, என் குடும்பம், என் சுகங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் அரசியலில் குதிப்பேன். அதுவரை அரசியலை கற்றுக்கொள்வேன். என்னுடைய அரசியல் நுழைவு தமிழகத்திற்கு விடியலை தருவதுபோல் இருக்க வேண்டும்” என்றார் ரஜினி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT