கடந்த 5 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

Advertisment

இந்த ஆலோனைகூட்டத்தில் 'தான் கட்சி ஆரம்பித்தால் நான் முதல்வர் வேட்பாளர் இல்லை உங்களில்ஒருவர்தான்முதல்வர் வேட்பாளர்'எனநிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியதாகவும்,அதற்குநிர்வாகிகள் மறுப்பு தெரிவித்ததாகவும்.இதைத்தான்ரஜினிகாந்த் ஏமாற்றம் எனச் செய்தியாளர்களிடம் குறிப்பட்டதாவும் தகவல்கள்வெளியான நிலையில் மீண்டும் நாளை ரஜினி மக்கள் மன்றநிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியது.

Advertisment

Announcement to start the party? Rajini People's Forum Executives Visit ...

இந்நிலையில் இன்றுரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களைரஜினிசந்திக்க இருக்கிறார். தற்போது சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர்.அதேபோல் இன்று நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சிநிலைபாடு குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கு பிறகு இன்று11.00 மணி அளவில் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்திருக்கிறார் ரஜினி. இந்த சந்திப்பின்போது தனது அரசியல் திட்டம், எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசுவார் என்றும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Advertisment