ஆன்மீக இடமான இமயமலையில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டு, அங்குள்ள தமது குரு பாபாவிடம் ஆசி பெறச் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் இமயமலைப் பயணம் மாறுபட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

Advertisment

தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, விரைவில் கட்சி பெயர், கொடியை அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அதுதொடர்பான கேள்வியை முன்வைத்தபோது, ஆன்மீக பயணமாக இமயமலை வந்துள்ளதால், இந்த இடத்தில் வைத்து அரசியல் குறித்து பேச விரும்பவில்லை எனக்கூறி மறுத்துள்ளார்.

Advertisment