ADVERTISEMENT

தி.மு.க. வழியில் அ.தி.மு.க ! - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்!

03:35 PM Mar 21, 2019 | Anonymous (not verified)

தமிழகத்தின் ஆகப்பெரிய கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் வேட்பாளர்கள் தேர்வில் அதீத கவனம் செலுத்தியிருந்தாலும் வாரிசுகளுக்கு வாய்ப்புத் தருவதில் சளைக்கவில்லை. பொதுவாக, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன் இரண்டு கட்சிகளிலுமே அதிருப்திகள் வெடிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், தி.மு.க.வில் அமைதியையும் அ.தி.மு.க.வில் கொந்தளிப்பையும் உருவாக்கியிருக்கிறது வேட்பாளர் தேர்வு.

ADVERTISEMENT

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசியபோது, ""கட்சியின் சீனியர்கள், மக்களோடு தொடர்புடைய கட்சி உழைப்பாளிகள், வாரிசுகள் என பல வகையிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பார்லிமெண்டில் அனுபவம் பெற்றவர்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோட்பாட்டில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம் உள்ளிட்ட சீனியர்களுக்கு வாய்ப்புத் தந்துள்ளார் ஸ்டாலின். அதேசமயம், பொள்ளாச்சி சண்முகசுந்தரம், திண்டுக்கல் வேலுச்சாமி, காஞ்சிபுரம் செல்வம், நெல்லை ஞானதிரவியம் போன்ற உழைப்பாளிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. சபரீசன் மேற்பார்வையில் இயங்கும் ஓ.எம்.ஜி.யின் சிபாரிசில் 4 பேருக்கு சீட் தந்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால், அவர்களும் தேர்தலை சமாளிக்கும் திறன் உள்ளவர்களா என பார்த்துதான் கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாரிசுகளுக்கு வாய்ப்புத்தரக்கூடாது என கட்சியில் கருத்து மோதல் வெடித்திருந்த நிலையில், கலைஞரின் மகள் கனிமொழி (தூத்துக்குடி), துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் (வேலூர்), ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி (வடசென்னை), முரசொலிமாறனின் மகன் தயாநிதிமாறன் (மத்தியசென்னை), தங்கம் தென்னரசு சகோதரி தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென்சென்னை), பொன்முடி மகன் கௌதமசிகாமணி (கள்ளக்குறிச்சி) என 6 பேருக்கு சீட்டு தரப்பட்டுள்ளது. இதிலும் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் சரியான வேட்பாளர்கள்தான். இதில் துரைமுருகன் மற்றும் பொன்முடியின் வாரிசுகள் குறித்துத்தான் கட்சிக்குள் எதிர்ப்புகள் இருந்தன. ஆனால், அவர்களது வாரிசுகளைத் தவிர்த்து, வேறு ஒருவரை தேர்வு செய்யும்போது வெற்றிக்கு உறுதி இல்லாத நிலை. அதேசமயம், பொள்ளாச்சி தொகுதிக்கு பொங்கலூர் பழனிச்சாமி தனக்கு அல்லது தனது மகன் பைந்தமிழ்பாரிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டார். அதேபோல இன்னும் சில தொகுதிகளுக்கு பலபேர் கேட்டனர். அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லை ஸ்டாலின்.

இடைத்தேர்தல் நடக்கும் கலைஞரின் திருவாரூர் தொகுதியில் கலைஞரின் குடும்ப உறுப்பினர் ஒருவர்தான் நிற்க வேண்டும் என கோரிக்கை எழுந்தபோது அதை மறுத்து பூண்டி கலைவாணனுக்கு வாய்ப்புத்தந்துள்ளார் ஸ்டாலின். ஆக, வாரிசுகளுக்கு வாய்ப்பு தரப்பட்டது என்பது வெறும் வாரிசு என்பதற்காக மட்டுமல்ல. அதேபோல, இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் பெரம்பூர் ஆர்.டி.சேகர், பெரியகுளம் சரவணக்குமார், பரமக்குடி சம்பத்குமார், ஆண்டிப்பட்டி மகாராஜன் உள்பட 12 வேட்பாளர்கள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர் தேர்வு இந்தமுறை 90 சதவீதம் ஆரோக்கியமாக இருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிப்ப தற்காகவும் மா.செ.க்கள் மற்றும் கட்சியின் சீனியர்களுடன் 17-ந் தேதி மாலையில் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தி னார் பழனிச்சாமி. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படி வேட்பாளர்களை தேர்வுசெய்திருந்த எடப்பாடி, அதனை வாசிக்க, மா.செ.க்கள் பலரும் சிபாரிசு செய்திருந்த நபர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததால் கோபம் கொப்பளித்தது. ""இது லிஸ்ட்டே இல்லை. எங்களது சிபாரிசுகளைவிட உளவுத்துறை சிபாரிசுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பீங்களா?'' என எகிறினார்கள்.

மதுரையை முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசனுக்கு தர வேண்டுமென அமைச்சர்கள் உதயக்குமார், செல்லுர்ராஜு மற்றும் 4 எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசு செய்தனர். அப்போது வெகுண்டெழுந்த ராஜன்செல்லப்பா, ""என் மகனுக்குத்தான் (ராஜ்சத்யன்) கொடுக்க வேண்டும். இல்லைன்னா இங்கு நடக் கிறதே வேற''’என மல்லுக்கட்டினார். தடித்த வார்த்தைகளை யும் பயன்படுத்த, எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் இதனைக் கண்டித்தனர். ஆனாலும் பொறுமையிழந்த ராஜன்செல்லப்பா, ""உங்க மகனுக்கு சீட் வாங்கிட்ட தைரியத்துல நீங்க பேசறீங் களா? உங்க மகனுக்கு சீட் வேணாம்னு சொல்லுங்க. நானும் கேட்கலை'' என ஓ.பி.எஸ்.ஸிடம் ஆவேசம் காட்ட, அமைதிப் படுத்த முயற்சித்தார் எடப்பாடி. அவரிடமும் எகிறினார் ராஜன் செல்லப்பா. அமைச்சர் உதயக்குமாருக்கும் ராஜன்செல்லப்பா வுக்கும் அடிதடி நடக்குமளவுக்கு மோதல் வெடித்தது.

பாப்பிரெட்டிப்பட்டி அல்லது ஓசூர் இடைத்தேர்தலில் போட்டியிட கடுமையாக மோதினார் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனு சாமி. ஆனால், "கிருஷ்ணகிரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுங்கள்' என பிடிவாதமாக எடப்பாடி நின்றதால் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டார். இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவர் ஜெயித்துவிட்டால் அமைச்சர் பதவி கேட்டு அடம்பிடிப்பார் என்ப தாலேயே அவரை எம்.பி. தொகுதிக்கு தள்ளிவிட்டுள்ளார் எடப்பாடி.

திருவண்ணாமலையை முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்ண மூர்த்திக்கு ஒதுக்குவதாக எடப்பாடி சொல்ல, இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், "சீட்டு களை விலைக்கு விற்காதீர்கள்' எனவும் கோஷமிட்டனர். "அக்ரிக்கு ஒதுக்கினால் நாங்கள் ராஜினாமா செய்வோம்' என மா.செ.க்கள் மிரட்டியும் பார்த் தார்கள். ஆனாலும் அக்ரிக் குத்தான் டிக் அடித்தனர் எடப்பாடியும் ஓ.பி.எஸ். ஸும். வடசென்னை தனக்கே கிடைக்கும் என எதிர்பார்த்த சிட்டிங் எம்.பி. வெங்கடேஷ்பாபு, அத்தொகுதி தே.மு.தி.க. வுக்கு ஒதுக்கப்பட, ""என் தொகுதியை என்னிடம் விவாதிக்காமல் கூட்டணி கட்சிக்கு எப்படி ஒதுக்க லாம்'' என மல்லுக்கட்டி னார். ஆனாலும் அவரது சொல் செல்லுபடியாக வில்லை. இடைத்தேர்தல் நடக்கும் பெரம்பூர் தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டுமென வெங்க டேஷ்பாபு கொடி பிடிக்க... மதுசூதனனும் மா.செ. ராஜேஷும் கடும் எதிர்ப்புக் காட்டினார்கள். இதனால், வெங்கடேஷ்பாபுவுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லை. பெரம்பூரை ராஜேஷ் கைப்பற்றினார்.

இந்த ரகளைகளை நம்மிடம் சுட்டிக்காட்டிய அ.தி.மு.க. மா.செ.க்கள், ""இப்படி அ.தி.மு.க.வின் பெரும்பாலான தொகுதிகளில் மோதல் வெடிக்க, 5 மணி நேரம் ஆலோசனை நடத்தியும் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் எடப்பாடி யும் ஓ.பி.எஸ்.ஸும் கட்சி தலைமையகத்தைவிட்டு இரவு 10 மணிக்கு வெளியேறினார்கள். தனது வீட்டில் ஓ.பி.எஸ். மற்றும் மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி விவாதிக்க, மதுரையை மட்டும் சேஞ்ச் பண்ணி, ராஜன்செல் லப்பா மகனுக்கு கொடுத்துட்டு மற்றபடி அப்படியே ரிலீஸ் செய் திடலாம் என முடிவெடுத்தனர். ஆனால், வேட்பாளர்கள் பட்டி யலை எடப்பாடி அறிவிக் காமல், தலைமைக்கழக நிர்வாகி மூலம் பட்டியலை ரிலீஸ் செய்ய வைத்தார் எடப்பாடி. அ.தி.மு.க.வின் பட்டியலுக்கு கடும் எதிர்ப்பு கள் இருந்த நிலையில், அதனை மாற்றியமைக் காமல் அப்படியே ரிலீஸ் செய்யப்பட்டிருப்பதால் ஒவ்வொரு தொகுதியிலும் கொந்தளிப்புகள் உருவாகி யுள்ளது'' என்கிறார்கள் காட்டமாக! தி.மு.க.வில் 6 வாரிசுகள் தொகுதியை கைப் பற்றிய நிலையில்... குடும்ப அரசியலுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட அ.தி. மு.க.வில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன், பி.ஹெச். பாண்டியன் மகன் மனோஜ்பாண்டியன் ஆகிய 4 பேர் சீட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

கலைஞர் மற்றும் ஜெய லலிதா ஆகிய இரண்டு தலைவர்கள் இல்லாத நிலையில் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி, வாரிசுகளின் ஆதிக்கம், பெருந் தலைகளின் மோதல்கள் என நடக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் தான் தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகளின் வலிமையை நிரூ பிக்கப் போவதால் இப்போதே தகிக்கத் துவங்கியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT