ADVERTISEMENT

யுவன் ஷங்கர் ராஜாவை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்

11:55 AM Nov 10, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இதில் தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறை, திரைத் துறை, விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல துறைகள் உள்ளடங்கும். இந்த கோல்டன் விசாவைப் பெறுபவர்கள் 10 வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாகக் கருதப்படுவர்.

இந்த கோல்டன் விசாவை இந்தியத் திரைத்துறையைச் சார்ந்த பல முன்னணி பிரபலங்கள் வாங்கியுள்ளார்கள். இந்தியில் ஷாருக்கான், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும், மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும், தமிழில் கமல்ஹாசன், பார்த்திபன், சிம்பு, விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆண்ட்ரியா, மீனா உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம் அவரைத் தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவையும் கௌரவித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா, அண்மையில் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு 'உம்ரா' என்ற புனிதப் பயணத்தை மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது கோல்டன் விசா பெறும் யுவன் ஷங்கர் ராஜா புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT