/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-2_33.jpg)
தமிழ் சினிமாவில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஏற்றார் போல தன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துபவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் இன்று முக்கியமாக பார்க்கப்படுபவர் நாசர். இவர் 300-க்கும் மேற்பட்ட படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் 37 ஆண்டுகள் திரைத்துறையில் கடந்துள்ளார். அதனை கொண்டாடும் வகையில் சமூக வலைதளத்தில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். தற்போது நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நாசருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் அமீரகம் தொடர்ந்து இந்திய திரைப்பிரபலங்கள் பலருக்கும் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை பெறுபவர்கள் 10 வருடங்களுக்கு துபாய் நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி, பார்த்திபன், மீனா, திரிஷா மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)