shoe

Advertisment

துபாயில் உலகிலேயே அதிக விலை உடைய காலணி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காலணி தங்கம் மற்றும் வைரகற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை மதிப்பு சுமார் 17 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ 123 கோடி. இவ்வளவு விலை உயர்ந்த இந்த காலணியை ஜெட்டா என்ற துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரி என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ’புர்ஜ் அல் அரப்’ என்று சொல்லப்படும் ஆடம்பர 7ஸ்டார் ஹோட்டலில் பொது மக்களின் பார்வைக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது. இந்த காலணிக்கு முன்பு டெப்பி விங்காம் ஹை ஹீல்ஸ் காலணிதான் உலகிலேயே விலை உயர்ந்ததாக இருந்தது. இதன் மதிப்பு 15 மில்லியன் டாலர்