yuvan about vijay political entry

Advertisment

யுவன் ஷங்கர் ராஜா, விஜய்யின் 68வது படம், ஜெயம் ரவியின் 'இறைவன்', நிவின் பாலியின் 'ஏழு மலை ஏழு கடவுள்' என ஏகப்பட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் யுவன், அண்மையில் மலேசியாவில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதில் சிம்புவும் கலந்து கொண்டு பாடினார். இந்நிகழ்ச்சி அங்கு பெரும் வரவேற்பைப் பெற, அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6b3b8284-c982-4d6a-ab6b-db3a14e9e464" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%20%281%29_20.jpg" />

இந்நிலையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "எதிர்பார்க்காத வரவேற்பு அங்கு கிடைத்தது. புதுசா ஏதாவது பண்ணனும் என முயற்சித்து இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அது கண்டிப்பா மக்களுக்கு பிடிக்கும் என நம்பினோம். அதே போல் நடந்தது. சிம்பு வாய்ப்பே இல்லை. செம எனர்ஜி. மக்கள் நல்ல என்ஜாய் பண்ணாங்க" என்றார்.

Advertisment

விஜய்யின் 68வது படம் குறித்தும் லியோ படத்தில் 'நா ரெடி' பாடல், போதையை ஊக்குவிப்பதாக எழுந்த சர்ச்சை குறித்தும் கேள்வி கேட்கப்பட்ட நிலையில்,அதற்குப் பதிலளித்த அவர், "விஜய் படத்துக்கு பணியாற்ற காத்திருக்கிறேன். லியோ படத்தில் கதைக்கு தேவை என்பதால் அது போன்ற பாடல்கள் வைக்கிறார்கள். மற்றபடி எதுவும் இல்லை" என்றார். விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, "நல்ல ஒரு விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார்.