ADVERTISEMENT

'வானவன்' - பிறந்தநாளில் யோகிபாபுவின் சர்ப்ரைஸ்

06:54 PM Jul 22, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து வரும் யோகிபாபு தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து 'காண்டிராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்', பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்திலும் நடிக்கிறார். தமிழ், இந்தியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பெயரிடாத படத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். பிரித்விராஜ் நடிக்கும் 'குருவாயூர் அம்பல நடையில்' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் யோகிபாபு. இதனை முன்னிட்டு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸாக அவர் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு மற்றும் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'வானவன்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சஜின் கே. சுரேந்திரன் இயக்கும் இப்படத்தை தாமஸ் ஜார்ஜ் தயாரிக்கிறார். ரமேஷ் திலக், லட்சுமி பிரியா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோவிந்த வசந்த இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை யோகிபாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT