Skip to main content

எமோஷனலான யோகி பாபு - ஆறுதல் படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

yogibabu gets emotional at Bommai Nayagi Premiere Show

 

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'பொம்மை நாயகி'. ஷான் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகி பாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். நாளை (03.02.2023) இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரீமியர் காட்சி நடைபெற்றது. 

 

அதில் ஜெயம் ரவி, ஆர்யா, விதார்த், மிர்ச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மிர்ச்சி சிவா, “மண்டேலா படத்திற்குப் பிறகு இந்த படம் யோகி பாபு கரியரில் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என வாழ்த்தினார். ஆர்யா பேசும்போது, "யோகி பாபு நடிகருக்கு தேவையான பல வகைகளில் அழகாக நடிக்கிறார். உண்மையிலே அவரை பார்க்கையில் பொறாமையா இருக்கு..." எனக் குறிப்பிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். ஜெயம் ரவி பேசுகையில், "நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இறைவன் அருள் எப்போதும் அவருக்கு இருக்கு" என்றார்.

 

மூவரும் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அருகிலிருந்த யோகி பாபு எமோஷனலாக காணப்பட்டார். உடன் நின்ற ஆர்யா, மிர்ச்சி சிவா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் ஆறுதல் படுத்தியபடி யோகிபாபுவை அணைத்துக்கொண்டே பேசினர். பின்பு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சட்னி - சாம்பார்'  சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக்!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Chutney Sambar Series first look

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார், நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. 

தமிழ் திரையுலகில் 'மொழி' திரைப்படம் முதலாக, அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய  தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் 'சட்னி-சாம்பார்' சீரிஸ் உருவாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார்.  ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  இந்த வெப் சீரிஸ் எத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பதை மிகத்தெளிவாக சொல்லும்படி அமைந்துள்ளது.  போஸ்டரில் யோகி பாபு ஒரு டைனிங் டேபிளின் மையத்தில், அவரது அப்பாவி முகத்துடன்  அமர்ந்திருக்கிறார், அவரைச் சுற்றிப் புன்னகை ததும்ப  மற்ற நடிகர்கள் அனைவரும் அருகில் இருக்கின்றனர்.

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.இந்தத் சீரிஸில் நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 

'சட்னி-சாம்பார்' சீரிஸிற்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிப் புகழ் பெற்ற அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார். 'சட்னி-சாம்பார்' சீரிஸை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ்  பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

Next Story

ஏ.ஆர் ரகுமானின் குரலில் வெளியான ஜெயம் ரவி பட கிளிம்ப்ஸ்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
jayam ravi nithya menon kadhalikka neramillai glimpse released

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில், யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. போஸ்டரில் ஜெயம் ரவியும், நித்யா மேனனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும் போஸ்டரில், நித்யா மேனன் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகுதான் ஜெயம் ரவி பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இப்படத்தில் நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பெண் கலைஞர்கள் அதிக பேர் வேலை பார்ப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்ததாக படக்குழு தரப்பு தெரிவித்தது. 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியிருந்தது. இந்த நிலையில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர் ரகுமான் குரலில், ஒரு பாடலுடன் இந்த வீடியோ அமைந்திருக்கிறது. மேலும் இசை உரிமத்தை டி-சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.