yogibabu join to the shoot of prabhas next

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' உள்ளிட்ட படங்களிலும்கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து 'காண்டிராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

மேலும், ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்', விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் 'வாரிசு' படங்களில் நடிக்கிறார். இது போக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்திலும் நடிக்கிறார்.

Advertisment

இந்நிலையில், முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தெலுங்கில் முன்னணி நடிகராகவும் இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் பிரபாஸ், தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிப்பதாகவும் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஹாரர் காமெடி ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகவும், இப்போது யோகிபாபுவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் மூலம் தெலுங்கிலும் யோகிபாபு பிரபலமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்புதெலுங்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'காக்கி' படத்தில் 'சித்ரம்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.