ADVERTISEMENT

“நான் கேட்டதும் உடனே வந்து இப்பாடலை பாடினார்..” - ‘இடிமுழக்கம்’ படம் குறித்து மனம் திறக்கும் சீனுராமசாமி

09:50 AM Aug 21, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி. இவர் தற்போது நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமாரை வைத்து ‘இடிமுழக்கம்’ எனும் படத்தை இயக்கிவருகிறார்.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்திருக்கும் ‘ஜெயில்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘நீர்ப்பறவை’ படத்தின் ‘பற.. பற.. பற.. பறவை ஒன்று..’ எனும் பாடலால் தமிழ் ரசிகர்களின் மனதை இசையில் மூழ்கடித்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன், சீனு ராமசாமி, ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் உருவாகிவரும் ‘இடிமுழக்கம்’ படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

’இடிமுழக்கம்’ திரைப்படத்தில் என்.ஆர். ரகுநந்தன் இசையில் கவிஞர் வைரமுத்து எழுதிய
‘பூ மலரும் காலம் எது
யார் அறிவார்
அன்பூ மலரும் இதயம்
எது யார் அறிவார்...’
என்ற பாடலை பிரபல மலையாள இயக்குநரும், எழுத்தாளருமான வினித் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார்.

இதுபற்றி இயக்குநர் சீனு ராமசாமி கூறுகையில் "இசையமைப்பாளர் ரகுநந்தன் தந்த டியுனுக்கு வினித் பாடினால் நன்றாக இருக்கும் என்றேன். இசையமைப்பாளர் ரகுநந்தன் என் கருத்தை ஏற்றுக்கொண்டார். ஒரு கலைஞனாக வினித் ஸ்ரீனிவாசன் மீது மிகுந்த அன்பு கொண்டவன் நான். அவரை நினைத்தாலே என் மனம் இனம் புரியாத சந்தோசம் கொள்ளும்.

‘இடிமுழக்கம்’ படத்தில் பாடுவதற்கு வினித் ஸ்ரீனிவாசனை அணுகினேன். அவரும் என் மீது அன்புகொண்டிருக்கிறார். என் படங்களின் வழியாக என்னை நன்கு அறிந்திருக்கிறார் என்பதை தெரிந்து நெகிழ்ந்தேன். நான் கேட்டதும் உடனே வந்து இப் பாடலை பாடினார். வினித் ஸ்ரீனிவாசன் பாடிய இந்த மெலடி அனைவரது மனதிலும் இடம்பிடிக்கும்" என்றார் இயக்குநர் சீனு ராமசாமி.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT