udhayanidhi stalin release gv prakash idimuzhakkam first look

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி, ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். ‘இடி முழக்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஜி.வி பிரகாஷ் கிராமத்து கெட்டப்பில் கையில் கத்தியுடன் மாஸாக தோன்றியுள்ளார். ஜி.வி பிரகாஷின் பிறந்த நாளான இன்று உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அமைந்துள்ளது.