gsdbgsbsd

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் கண்ணே கலைமானே. இதையடுத்து இவர் விஜய்சேதுபதியை வைத்து 'மாமனிதன்' படத்தை இயக்கினார். இப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி அடுத்தாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருந்தார்.

Advertisment

சீனு ராமசாமி கூறிய கதை ஜி.வி.பிரகாஷுக்கு பிடித்துப்போனதால் அவரும் உடனே சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, இப்படத்திற்கான ஆரம்பகட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்தன. தற்போது ஆரம்பகட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

hdhdr

Advertisment

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக காயத்ரி நடிக்கவுள்ளதாகஅறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர், இப்படத்தில் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியராக நடிக்கவுள்ளார். சீனு ராமசாமியின் எட்டாவது படமான இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார்.