ADVERTISEMENT

இந்த பாடல்களை பாடியவர் உங்கள் விஜய் - ‘பம்பாய் சிட்டி’ முதல் ‘நா ரெடி’ வரை

12:34 PM Jun 22, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'கூகுள்.. கூகுள்.. பண்ணி பார்த்தேன் உலகத்துல..' என விஜய் தேடியது போல அவர் பாடிய பாடலையும் தேடி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இன்று அவரது பிறந்தநாள் விருந்தாக லியோ படத்தில் இருந்து 'நா ரெடி..' பாடல் வெளியாகிறது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் ரெடியாகி வரும் சமயத்தில் அவர் பாடகராகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளையும் நெருங்கவுள்ளார். அப்படி ரசிகர்களின் பிளேலிஸ்ட் முதல் யூட்யூபின் ட்ரெண்டிங் லிஸ்ட் வரை அவர் பாடிய முக்கியமான பாடல்களின் தொகுப்பை காண்போம்.

'பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி...' (ரசிகன்) - 1994

1992-ஆம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படம் மூலம் நடிகராக தமிழ்த் திரையுலகில் தடம் பதித்த விஜய், பாடகராக 2 வருடங்கள் கழித்து தான் அறிமுகமாகிறார். குத்துப் பாடலாக அமைந்த பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. மேலும் அப்பாடல் திரையில் வருகையில் விஜய் அணிந்திருந்த டி-ஷர்ட் கலரான மஞ்சள் நிற எழுத்தில் 'இந்தப் பாடலை பாடியவர் உங்கள் விஜய்' எனத் தோன்றியது. அதன் பிறகு தொடர்ந்து அவர் பாடிய சில பாடல்களில் இப்படி பெயர் போடுவது தொடர்ந்தது. அந்த சென்டிமென்ட் மீண்டும் 'லியோ' படத்தில் தொடர்கிறது. அவரது நாஸ்டால்ஜியா நினைவாக 'நா ரெடி' பாடலிலும் அதை பயன்படுத்தியுள்ளார்கள்.

'ஒரு கடிதம் எழுதினேன்...' (தேவா) - 1995

முதல் பாட்டு குத்துப் பாடலாக அமைந்த நிலையில் இரண்டாவது பாடல் மெலடி சாங்காக அமைந்தது. அக்காலகட்டத்தில் காதலர்களின் ஃபேவரட் சாங்காக இருந்தது. இன்றும் ரசிக்கக் கூடியதாக இப்பாடல் அமைந்துள்ளது. இதே படத்தில் 'ஐய்யயோ அலமேலு ஆவின் பசும்பாலு...' என்ற பாடலையும் பாடியிருப்பார்.

'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா...' - (விஷ்ணு) - 1995

இன்றைக்கும் நீலகிரியில் உள்ள தொட்டபெட்டா மலைக்கு போனால் இப்பாடல் நினைவு கூறாதே ஆட்களே இருக்க முடியாது. மேலும் லாரி ஓட்டுநர்களின் ஃபேவரட் பாடலாக இருந்து வருகிறது. அதோடு பட்டிதொட்டி எல்லாம் விஜய்யை பாடகராக கொண்டு சேர்த்தது இப்பாடல். இப்பாடலுக்கு வலு சேர்த்து விஜய்யின் அம்மாவும் பாடகியுமான ஷோபாவின் குரல்.

'அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி...' - (காலமெல்லாம் காத்திருப்பேன்) - 1997

கானா இசையில் விஜய் பாடிய இப்பாடல் இளசுகளின் கொண்டாட்டத்திற்கு வித்திட்டது. மேலும் விஜய்யின் நடனம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்தது.

'ஊர்மிளா ஊர்மிளா...' - (ஒன்ஸ் மோர்) - 1997

விஜய் சிம்ரனோடு இணைந்து வரும் பாடல் ஒன்ஸ்மோர் ரகமாக அமைந்தது. மீண்டும் தனது அம்மா ஷோபாவுடன் பாடிய இப்பாடல் காதலர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. மேலும் விஜய் - ஷோபா இணைந்தால் வெற்றி கூட்டணி என பெயர் பெற்றது. கிராமங்களில் மினி பஸ்களில் இந்த பாடல் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

'ஓ...பேபி, பேபி...' - (காதலுக்கு மரியாதை) - 1997

இளையராஜா இசையில் விஜய் பாடிய இந்த பாடல், பாடலின் தலைப்புக்கேற்றவாறு பேபியின் குரல் போலவே மென்மையாக இருந்தது. மேலும் குழந்தைகளைத் தண்டி பெரியவர்களால் ரசிக்க கூடியதாக அமைந்தது.

'நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து...' - (பெரியண்ணா) - 1999

இதுவரை தன் படங்களில் மட்டும் பாடி வந்த விஜய் முதல் முறையாக முன்னணி நடிகரான விஜயகாந்த், சூர்யா நடித்த இப்படத்தில் பாடினார். மேலும் விஜயகாந்த் மீது வைத்துள்ள மரியாதை காரணமாகவும் சூர்யா மீதுள்ள நட்பின் காரணமாக இப்பாடலை விஜய் பாடியுள்ளதாக அப்போது கூறப்பட்டது. சூர்யாவிற்கான குரலாக இந்த டூயட் பாடல் இடம்பெற்றது.

'தங்க நிறத்துக்கு தான்...' - (நெஞ்சினிலே) - 1999

இந்தியாவை கூறு போட்டு விற்றுத் தீர்த்த பாடலாக அமைந்தது. பாடலின் வரிகள் அவ்வாறு அமைந்திருந்தது. விஜய்யின் குரலும் பாடலை அடுத்த லெவலுக்கு எடுத்துப் போனது. மீண்டும் தேவாவின் இசையில் விஜய் பாடிய இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு 'என்னோட லைலா...' (பத்ரி), 'உள்ளத்தை கிள்ளாதே...' (தமிழன்), 'கோகோ கோலா...' (பகவதி), 'வாடி வாடி...' (சச்சின்) உள்ளிட்ட பாடல்களைப் பாடி தேர்ந்த பாடகராகவும் வலம் வந்தார்.

2005ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த பாடலையும் பாடாத விஜய் மீண்டும் துப்பாக்கி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். 'கூகுள்..கூகுள்' பாடல் மூலம் மீண்டும் பாடகர் விஜய்யாக ரசிகர்களை மகிழ்வித்தார். இதனைத் தொடர்ந்து 'வாங்கணா வணக்கங்கணா...' (தலைவா), 'கண்டாங்கி கண்டாங்கி...' (ஜில்லா), 'செல்ஃபி புள்ள...' (கத்தி), என படத்துக்கு ஒரு பாடலாவது பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய 'வெறித்தனம்...'(பிகில்) பாடல் ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்தது. மேலும் ஓப்பனிங் சாங்காக அமைந்தது ரசிகர்களை வெறித்தனமாக குத்தாட்டம் போட வைத்தது. பின்பு எல்லா மேடைகளிலும் அவர் குட்டி ஸ்டோரி பிரபலமானதை வைத்து 'குட்டி ஸ்டோரி' (மாஸ்டர்) பாடலை பாடினார். இப்படி பாடகராக தொடர்ந்த விஜய் பயணம் கடைசியாக 'ரஞ்சிதமே...' (வாரிசு) பாடலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் நடனமாட வைத்தது. அதன் தொடர்ச்சியாக நா ரெடி...(லியோ) பாடலுக்கு அனைவரும் ரெடியாக உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT