'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் காவல்துறையினர் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புரோகிதர்களின் இறுதிச்சடங்கு நடைமுறைக்கு பின், காவல்துறையினரின் மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி.க்கு சொந்தமான பண்ணை நிலத்தில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி.க்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். 24 காவலர்கள் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எஸ்.பி.பி.க்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், உறவினர்கள் இறுதியஞ்சலி செலுத்தினர். குறிப்பாக நடிகர் விஜய், மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு நேரில் இறுதியஞ்சலி செலுத்தினார். மேலும் எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி. சரணுக்கு ஆறுதல் கூறினார்.