ADVERTISEMENT

மீண்டும் சாதனை படைத்த விஜய் பாடல் - ரசிகர்கள் கொண்டாட்டம்

11:51 AM Jun 16, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ரூ.236 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் படக்குழு, படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலி ஓ ஜிம்கானா' வீடியோ பாடல்களை வெளியிட்டது.

இந்நிலையில் 'அரபிக்குத்து' வீடியோ பாடல் யூ-டியூபில் சாதனை படைத்துள்ளது. விஜய்யின் ட்ரேட் மார்க் நடனம் மற்றும் பூஜா ஹெக்டேவின் துள்ளல் நடனம் என ரசிகர்களை கவர்ந்த இப்பாடல் தற்போது யூ-டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. மேலும் டாப் மியூசிக் வீடியோ ட்ரெண்டிங் லிஸ்டில் தற்போது நான்காவது இடத்தில உள்ளது. இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே 'அரபிக்குத்து' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வரை 432 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT