vijay's beast movie team again going to georgia

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.செல்வராகவன், யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

முதற்கட்ட படப்பிடிப்பைசென்னையில் நிறைவுசெய்த படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றது. அங்கு ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய காட்சிகள்படமாக்கப்பட்டன. அதன் பிறகு சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 80 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, தற்போது படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சியைப் படமாக்குவதற்காக மீண்டும் ஜார்ஜியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

நடிகர் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிபள்ளிஇயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வஅறிவிப்பு அண்மையில் வெளியானது.