சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். பெரும் எதிர்பார்ப்புக்குமத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டான் சாக்கோ தீவிரவாதிகளில் ஒருவராகநடித்திருப்பார்.
இந்நிலையில் நடிகர் ஷைன் டான் சாக்கோ பீஸ்ட் படத்தின் காட்சிகள் லாஜிக் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பீஸ்ட் படம் நான் இன்னும் பார்க்கவில்லை. ஒருவர் பொதுவாக அதிகமானஎடையை கையில் தூக்கினால் முகத்தில் கஷ்டம் தெரியும். ஆனால் அப்படி எந்தவிதமான முக பாவனைகளும்விஜய் முகத்தில் தெரியவில்லை. தீவிரவாதியை விஜய் கையில் சூட்கேஸாகதூக்கி வரும் காட்சிகள் லாஜிக்கே இல்லாதவை.அதற்காக நான் விஜய்யை குறை சொல்லவில்லை. இதற்கு காரணம் படக்குழுதான்" எனக் கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் பீஸ்ட் படம் தமிழில்நல்லஅறிமுகமானபடமாக அமைந்ததாஎன்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இல்லை என பதிலளித்த அவர், பெரிய படத்தில் நடித்தால் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வரும் என்றார். இவரின்இந்த கருத்து விஜய் ரசிகர்களை பெரும் கோபத்தில் அளித்துள்ளது. மேலும் ஷைன் டான் சாக்கோவிற்கு எதிராகவும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இடபத்தை படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.