Advertisment

vijay JollyO Gymkhana song promo video released

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் 'பீஸ்ட்' படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

Advertisment

சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்த நிலையில், இன்று(19.3.2022) மாலை 6 மணிக்கு படத்தின் இரண்டாவது பாடலான 'ஜாலியோ ஜிம்க்கானா'பாடல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் உருவான வீடியோவைசிறு ப்ரோமோவாகபடக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜானி மாஸ்டர் கடினமான ஸ்டெப் ஒன்றை சொல்லிக் கொடுக்க, இது விஜய் சாருக்கு ஓகே ஆனா இவங்களுக்கு... இவங்க எப்படி ஆடுவாங்க என ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்டோரை பங்கமாய் கலாய்க்கிறார் நெல்சன். அத்துடன் இவர்களைநான் பார்த்துகிறேன் நீங்க விஜய் சார் மற்றும் பூஜா ஹெக்டேவை வைத்து ஸ்டார்ட் பண்ணுங்கஎன்று நெல்சன் கூறுவது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.