ADVERTISEMENT

“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்

03:25 PM Oct 21, 2019 | santhoshkumar

அட்லி, விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். இந்த படம் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த மாதம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது விஜய் வழக்கம்போல இசை வெளியீடு விழாவில் குட்டிக்கதை ஒன்று கூறினார்.

அதில், “பூக்கடையில் வேலை பார்ப்பவனை வெடிக்கடையில் வேலைக்கு சேர்த்தால் தண்ணீர் தெளித்து வியாபாரத்தைக் கெடுத்து விடுவான்” என்று கூறினார்.

பூ தொழிலாளர்களையும் மரியாதைக்குறைவாக, அவன், இவன் என்று பேசியது தங்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாக ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர்கள் சங்க செயலாளர் படையப்பா ரெங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் பேசியவர், மாவட்டம் தோறும் சுமார் ஒரு லட்சம் பூ தொழிலாளர்கள் பூத்தொழில் செய்கின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் புனிதமான தொழில் செய்பவர்கள் பூ தொழிலாளர்கள். அவர்களை தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதற்காக விஜய் மன்னிப்பு கோர வில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

முன்னதாக பிகில் பட போஸ்டரில் விஜய், இறைச்சி வெட்டும் கட்டையில் செருப்பு அணிந்த காலை வைத்து போஸ் கொடுத்திருப்பார். அதை கண்டித்து இறைச்சி கடை தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT