அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யும் அட்லியும் இணைந்து மூன்றாவது முறையாக பணிபுரிகிறார்கள் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வம் இருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krishnagiri-bigil_0.jpg)
இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ.120 பட்ஜெட்டுக்கு தொடங்கப்பட்ட இந்த படத்தின் பட்ஜெட் பின்னர் பல்வேறு காரணங்களால் ரூ.150 கோடிவரை செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு முதலில் சிறப்பு காட்சி வெளியிட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை, வேறு எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கான அனுமதியும் அளிக்கப்போவதில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று இரவு திடீரென சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து இன்று காலை நான்கு மணிக்கு போடப்படுவதாக இருந்த காட்சிகள் பல இடங்களில் போடப்பட்டது. ஆனால், கிருஷ்ணகிரியில் காலையில் சிறப்பு காட்சி தாமதமாக போட்டதால் விஜய் ரசிகர்கள் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். பொது சொத்துக்களை அடித்து நொறுக்கியும், போலீஸார் மீது கல்லை வீசி தாக்கியுள்ளனர். இதனை சமாளிக்க போலீஸார் அங்கு தடியடி நடடித்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த செயலை கண்டித்து சமூக வலைதளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரகளையில் ஈடுபட்ட முப்பது விஜய் ரசிகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)