நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அட்லியின் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

bigil

இந்த வருட தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 120 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிறந்தநாள் அன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டுள்ளார். படத்தின் பெயர் பிகில். காவி வேட்டியில் வயதான விஜய், கால்பந்தாட்டக்காரரான விஜய் உள்ளிட்ட இரு கதாபாத்திரங்களில் தோற்றம் அளிக்கிறார்.

Advertisment

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பது போல் ட்விட்டில் தெரிவித்துள்ளனர்.