அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யும் அட்லியும் இணைந்து மூன்றாவது முறையாக பணிபுரிகிறார்கள் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வம் இருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay-bigil-srilanka.jpg)
இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ.120 பட்ஜெட்டுக்கு தொடங்கப்பட்ட இந்த படத்தின் பட்ஜெட் பின்னர் பல்வேறு காரணங்களால் ரூ.150 கோடிவரை செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு முதலில் சிறப்பு காட்சி வெளியிட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை, வேறு எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கான அனுமதியும் அளிக்கப்போவதில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு திடீரென சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தியேட்டரையே விஜய் ரசிகர்கள் சூறையாடியுள்ளனர். இலங்கை ஜாஃப்னாவில் உள்ள ராஜா திரையரங்கில் "பிகில்" திரைப்படம் திரையிடப்படவுள்ள நிலையில், அதிகாலையே வந்த விஜய் ரசிகர்கள் பலர் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போன விரக்தியில் திரையரங்கை அடித்து சேதப்படுத்தினர். மேலும், திரையரங்கினுள் புகுந்து ஸ்க்ரீனையும் சேதப்படுத்திய அவர்கள் கேட்டை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். திரையரங்கு ஊழியர்களும் தாக்கபட்டுள்ளனர்.
தியேட்டரை சூரையாடிய விஜய் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)