ADVERTISEMENT

கன்னத்தை கிள்ளிய விஜய்..?

05:23 PM Jul 16, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் - விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்ற நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் யோகி பாபுவின் வீடியோ ஒன்றை நடிகை வரலட்சுமி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் யோகி பாபு பெண் வேடத்தில் அமர்ந்திருப்பது போன்றும், அவரது கண்ணத்தை ஒருவர் கிள்ளுவது போன்றும் முடியும் அந்த வீடியோவை பதிவிட்டு யோகி பாபுவை கிள்ளும் அந்த நபர் யார்..? என்று கண்டுபிடிங்கள் என்று அந்த பதிவில் வரலட்சுமி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளிய நபர் நடிகர் விஜய் என்று பலரும் கமன்ட் பதிவு செய்து வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

https://twitter.com/varusarath/status/1018721963336859649

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT