mr.chandramouli

Advertisment

vijay

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் 'சர்கார்' படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஜூன் 21ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அதில் நடிகர் விஜய் வாயில் சிகரெட் வைத்துள்ளது போல் வெளியான இந்த போஸ்டருக்கு பல் வேறு தரப்பிலுருந்து ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பின. குறிப்பாக ப.ம.க தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சில சுகாதார அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் புகைபிடித்தபடி உள்ள விஜய்யின் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இந்த படத்தை உடனடியாக நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">