
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் விஜய்62 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டில் வெளியீடு குறித்த புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அடுத்து அமெரிக்கா செல்லவிருக்கிறது. மேலும் விஜய்யின் பிறந்தநாளும் நெருங்கி வருவதால் படக்குழு படத்தின் டைட்டிலையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி விஜய் பிறந்தநாளுக்கு முன் நாளான ஜூன் 21-ஆம் தேதி மாலை படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது. இதை பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசியல் சம்பந்தமாக உருவாகும் இப்படத்தில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மேலும் ஜூலை மாத இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.