ADVERTISEMENT

திரையை கிழித்த ரசிகர்கள்; நடிகையை பாதுகாப்பாக வெளியேற்றிய தனுஷ் 

06:43 PM Aug 18, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தின் திரை ரசிகர்களால் கிழிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருந்த போது தாய் கிழவி பாடலுக்கு ரசிகர்கள் ஸ்க்ரீன் முன்பு எழுந்து ஆடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திரையரங்கு ஸ்க்ரீன் கிழந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் திருச்சிற்றம்பலம் படத்தின் அதிகாலை காட்சியை நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் ஆகியோர் படக்குழுவினருடன் பார்த்துள்ளனர். திரையரங்கில் தனுஷ்யை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் விசிலடித்து கரகோஷத்தை எழுப்பினர். மேலும், படம் முடிந்து தனுஷ் உட்பட படக்குழுவினர் வெளியேறினர். அப்போது, தனுஷ் தனது காரை நோக்கி செல்லும் வழியில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அப்போது, தனுஷுடன் அங்கு நடிகை ராஷிகண்ணாவும் உடனிருந்தார். வெளியே ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்ததால், பதட்டமடைந்த தனுஷ் அங்கிருந்த ராஷிகண்ணாவையும் அவருடன் சேர்த்து பத்திரமாக வெளியேற்றினார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT