Dhanush fans gave free petrol food delivery boys

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனுஷ் உணவு டெலிவரி பாயாக நடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நாளை(18.8.2022) வெளியாகவுள்ளது.இதனையொட்டி தனுஷ் ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேனர் கட் அவுட் வைத்து வைத்துள்ளனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cac8dd81-6a90-44f0-949a-76fc15e4d7e5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Thiruchitrambalam-Movie--Article-Ad-size-500-X-300.jpg" />

இந்நிலையில் தனுஷ் உணவு டெலிவரி பாயாக நடித்துள்ளதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் திருநெல்வேலி மாநகர பகுதியில் இருக்கும் உணவு டெலிவரி செய்யும் அனைவருக்கும் இலவசமாக பெட்ரோல் வழங்கியுள்ளனர்.மேலும் படம் நாளை வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் தற்போதிலிருந்தே திரையரங்கு முன் கொண்டாட தொடங்கியுள்ளனர்.